தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-15 16:37 GMT

தர்மபுரி:

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளை தலைவர் உமாராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், நிர்வாகி முனிராஜ், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் ஊழியர்கள் தெரிவிக்கும் பிரச்சினைகள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு பணிமாறுதல் வழங்கவேண்டும். பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளை விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்