கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-13 17:42 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் முகமது நபிகள் குறித்து அவதூறான கருத்துக்களை கூறிய நுபுல் சர்மா மற்றும் நவின் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் காதர் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் சதாம் உசேன் வரவேற்றார். கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கலீல், பொருளாளர் ஜாவித், மாவட்ட துணை தலைவர் பக்ரூத்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, மண்டல செயலாளர் முகமது கலீல், த.மு.மு.க. மாவட்ட தலைவர் நூர் முகம்மத், பாதிரியார் டேனியல் சக்கரவர்த்தி, ஜம் இய்யத் உலமா மாவட்ட தலைவர் அல்தாப் அகமத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் தன்வீர் ஆலம், தொகுதி செயலாளர் முன்னா ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஜமாத் நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் காதர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்