ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர்அருள்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்குவதுடன், வாரிசுகளுக்கும் பணி நியமனம் வழங்கவேண்டும். எவ்வித நிபந்தனையுமின்றி பணியமர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்து பாண்டி, பொருளாளர் விவேகானந்தம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.