தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை டவுனில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் துரை நாராயணன் தலைமை தாங்கினார். திராவிடர் தமிழர் கட்சி மாநில பொதுச்செயலாளர் கதிரவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சாதிய ஆணவ படுகொலையை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்ற கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழர் உரிமை மீட்புக்களம் லெனின் கென்னடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்துவளவன், இலக்கியவாதி முருகன் கண்ணா, சி.ஐ.டி.யு. மாவட்ட இணைச் செயலர் சரவண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.