கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-05-27 20:30 GMT

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையில் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வுகளை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்.

பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சடையப்பன் ஆகியோர் பேசினார்கள். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்