மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் கோபிநாத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி பாண்டியன், மக்கள் ஜனநாயக இளைஞர் கழக பொறுப்பாளர் திருமலை, அமைப்புகளின் நிர்வாகிகள் கிருஷ்ணன், சித்தானந்தம், தமிழ்வாணன், சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.