இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-20 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி சந்திரமவுலீஸ்வரர் கோவில் உண்டியலை திறந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கேள்வி கேட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கிஷோர் தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், பொதுச் செயலாளர்கள் அன்பரசன், கோவிந்தராஜ், அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்