சேதமடைந்த பொறியாளர் குடியிருப்பை இடித்து விட்டு வணிக வளாகம் கட்ட வேண்டும்: கம்பம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

சேதமடைந்த பொறியாளர் குடியிருப்பை இடித்து விட்டு வணிக வளாகம் கட்ட வேண்டும் என்று கம்பம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-10-27 18:45 GMT

கம்பம் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுனோதா செல்வக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கூடுதல் துப்புரவு பணியாளர்களை பணி அமர்த்துதல், சேதமடைந்த நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் குடியிருப்பை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டவேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் மற்றும் அதிகாரிகள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்