புதிய பஸ்நிலையத்தில் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தொடக்கம்

அருப்புக்கோட்டையில் ரூ.8 கோடியில் ஸ்மார்ட் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளதால் புதிய பஸ்நிலையத்தில் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

Update: 2023-04-17 19:37 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் ரூ.8 கோடியில் ஸ்மார்ட் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளதால் புதிய பஸ்நிலையத்தில் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

ஸ்மார்ட் பஸ் நிலையம்

அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு ரூ.8 கோடி மதிப்பில் ஸ்மார்ட் பஸ் நிலையமாக கட்டப்பட உள்ளது. இதற்காக அதன் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் 30 கடைகளையும் அதன் உரிமையாளர்கள் காலி செய்து சாவியை ஒப்படைக்குமாறு நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனையடுத்து ஒவ்வொரு கடையாக காலி செய்து அதன் உரிமையாளர்கள் சாவியை ஒப்படைத்து வருகின்றனர்.

கடைகள் இடிக்கும் பணி

இந்த கடை உரிமையாளர்களுக்கு தற்காலிக பஸ் நிலையத்தில் தற்காலிக கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. கடை உரிமையாளர்கள் சாவியை ஒப்படைத்த உடனேயே கடைகளை இடிக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டு புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்