ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டனர்.
ஊட்டி,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஊட்டி தாலுகா தலைவர் பானுமதி தலைமை தாங்கினார். தொடர்ந்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஊட்டி தாலூகா ஆர்.சி. காலனி பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலத்திற்கான வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த 27 குடும்பத்தினர் மற்றும் நீலகிரி மாவட்டம் முழுவதும் பட்டா இல்லாதவர்களின் விண்ணப்பங்கள், நில ஆதார விவரங்கள், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை நகல்கள் இணைத்து விண்ணப்பங்கள் அனுப்பப்படுகிறது. ஆனால், வீட்டுமனை பட்டா வழங்கப்பட வில்லை. எனவே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.