சாலை அமைக்க கோரிக்கை

ராஜபாளையம் அருகே சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-07 19:31 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் காமராஜர் நகர் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவின் மையத்தில் செல்கிறது. மழை நேரத்தில் கழிவுநீருடன், மழை நீரும் கலந்து விடுவதால் தெரு முழுவதும் சகதியாக மாறி விடுகிறது. இதனால் தெருவில் நடக்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தால் இரவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேக்கி வைப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்