அவதூறு வழக்கு: திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு 'பிடிவாரண்டு'

அவதூறு வழக்கு: திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு ‘பிடிவாரண்டு' சென்னை கோர்ட்டு உத்தரவு.

Update: 2023-08-28 18:48 GMT

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

போத்ரா இறந்து விட்ட நிலையில் அந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் 15-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்.கே.செல்வமணி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீலும் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறபித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணை செப்டம்பர் 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்