தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலி

விக்கிரமங்கலம் அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலியானது.

Update: 2023-05-11 18:37 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் மான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. நேற்று முன்தினம் மாலை ஸ்ரீபுரந்தான் நானாங்கரை ஏரி அருகே சுமார் 3 வயதுடைய ஆண் மானை தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக துரத்திச்சென்று கடித்து குதறின. இதனைக்கண்ட அப்பகுதி இளைஞர்கள் தெருநாய்களிடமிருந்து மானை மீட்டனர். ஆனால் நாய்கள் கடித்ததால் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த மான் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மானின் உடலை கைப்பற்றினர். பின்னர் கால்நடை டாக்டரின் பரிசோதனைக்கு பிறகு அந்த மானை வனத்துறையினர் குழித்தோண்டி புதைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்