நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாப சாவு

Update: 2023-08-10 15:54 GMT


வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவர் நேற்று தீயணைப்பு நிலையம் வந்து வேலகவுண்டம்பாளையத்தில் புள்ளிமான் ஒன்றை நாய்கள் கடித்துக்கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார். புள்ளி மானை மீட்க தீயணைப்பு நிலைய அலுவலர் வே.பிரபாகரன் தலைமையில் போக்குவரத்து அலுவலர் வேலுசாமி மற்றும் குழுவினர்களுடன் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 3 நாய்கள் புள்ளி மானை கடித்துக்கொண்டிருந்தது. உடனடியாக அந்த நாய்களை துரத்தி விட்டு மானை பார்த்தபோது மான் இறந்த நிலையில் இருந்தது. புள்ளி மானை தீயணைப்பு நிலையம் எடுத்து வந்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கோட்டை பீட் வனக்காப்பாளர் எம்.சரவணகுமார் வெள்ளகோவில் வந்து இறந்த மானை பெற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்