திருச்செந்தூர் பத்மஸ்ரீடாக்டர்சிவந்திஆதித்தனார்நர்சிங் கல்லூரியில் தீபத் திருவிழா

திருச்செந்தூர் பத்மஸ்ரீடாக்டர்சிவந்திஆதித்தனார்நர்சிங் கல்லூரியில் தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-12-23 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 12-ம் வருட முதலாமாண்டு மாணவிகளுக்கான தீபம் ஏந்தி ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்கும் தீபத் திருவிழா நடந்தது. விழாவிற்கு ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் தலைமை தாங்கினார். கல்லுரி முதல்வர் என்.கலைக்குருச்செல்வி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை காவேரி ஆஸ்பத்திரியின் முதன்மை செவிலியர் கண்காணிப்பாளர் வனிதா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விளக்கை ஏற்றி கல்லூரி முதல்வரிடம் அவர் கொடுத்தார். பின்னர் கல்லூரி இணை பேராசிரியைககள் சங்கீதா, ஹேமா ஆகியோரிடம் இருந்து மாணவிகள் விளக்குகளை பெற்று, கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வியிடம் தீப ஒளியை பெற்று கொண்டனர். தொடார்ந்து கல்லூரி துணை முதல்வர் பென்னரசி தலைமையில் மாணவிகள் ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாணவிகள் தீப ஒளி பாடலைப் பாடினர்.

காவேரி ஆஸ்பத்திரியின் முதன்மை செவிலியர் கண்காணிப்பாளர் வனிதா பேசுகையில், செவிலியர்கள் பொறுமையாகவும், பணிவுடனும் பணியாற்ற வேண்டும். அதேபோல், சகிப்புத்தன்மையுடன் சேவயாற்ற வேண்டும். மேலும், செவிலியர்கள் பன்முகத்திறன் கொண்டவர்களாகவும் செயல்பட வேண்டும். மாணவிகள் அனைவரும் மருத்துவசேவை, ஆசிரியர்பணி, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும், என்றார்.

நிகழ்ச்சிகளை கல்லூரி துணை பேராசிரியை வனிஷா, களப் பயிற்சியாளர் சுஜி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

விழாவில், சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா, கேம்பிரிட்ஜ் ஆங்கில பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் செல்வி கெனிட், காவேரி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சாந்தி, கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி இணை பேராசிரியை சுமதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்