வைகுண்ட ஏகாதசி 8-ம் நாள் அலங்காரம்
வைகுண்ட ஏகாதசி 8-ம் நாள் அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று, மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள், அழகர் கோவிலில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.