கரும்பு தோட்டத்தில் உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம்
கரும்பு தோட்டத்தில் உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு தேவையூர் (தெற்கு) கிராமத்தில் பஞ்சு மில் சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. அந்த கரும்பு தோட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை கண்டவர்கள் இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா?, யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு உடலை வீசி சென்றனரா? ஆசிட் வீசி கொலை செய்தனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.