பெண்ணுக்கு கொலை மிரட்டல்-3 பேருக்கு வலைவீச்சு

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2023-03-20 01:35 IST

களக்காடு:

களக்காடு அருகே பத்மநேரி தென்கரையை சேர்ந்தவர் சுடலைமணி மனைவி சுமதி (வயது 45). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை, அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நந்தகுமார் (19), ராஜேந்திரன் மகன் வசந்தகுமார், மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியுள்ளனர். இதுகுறித்து சுமதி களக்காடு போலீசில் புகார் செய்தார். நந்தகுமார் உள்பட மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சுமதிக்கும், நந்தகுமார் உள்பட மூவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சுமதி அங்குள்ள ஜக்கம்மாள் கோவில் அருகே வந்தபோது நந்தகுமார் உள்பட மூவரும் சேர்ந்து, எங்களை ஏன் போலீசில் புகார் செய்தாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் சுமதியை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நந்தகுமார் உள்பட மூவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்