போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்
உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பால்ராஜ்(வயது 34). இவர், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள போலீஸ் உதவி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று போலீஸ் உதவி மையத்தில் பால்ராஜ் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி, இவரது மகன் அன்பு உள்பட 4 பேர் திடீரென போலீஸ்காரர் பால்ராஜியிடம் தகராறு செய்தனர்.
மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பால்ராஜ், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தமிழ்மணி, அன்பு உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.