வீட்டில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு

திங்கள்சந்தை அருகே வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-30 22:13 GMT

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மாடியில் இருந்து தவறி விழுந்தார்

திங்கள்சந்தை அருகே உள்ள ஆலங்கோடு தெற்குவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 57). கொத்தனாரான இவர் நேற்றுமுன்தினம்

காலையில் ஆலங்கோட்டை சேர்ந்த பேபிகுமார் என்பவருடைய வீட்டின் 2-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் களியங்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சாவு

பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்