ஓசூர்
ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் வினோத்ராஜ் (வயது 34). சோலார் பேனல் வியாபாரம் செய்து வந்தார். இவர் ஸ்கூட்டரில், ஓசூர் ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடி அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் வினோத்ராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.