பேரிகை அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு

Update: 2023-06-10 19:30 GMT

ஓசூர்:

பேரிகை அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் இறந்தார். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

பெண் சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே எஸ்.தட்டனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி யசோதா (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று யசோதா அவர்களது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று யசோதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், திருமணமான 6 ஆண்டுகளில் பெண் இறந்தது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்