டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
அரூர் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
அரூர்
அரூர் அருகே உள்ள லிங்கநாயக்கன்அள்ளி தாஸ் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வகுத்துப்பட்டி-வெப்பாலம்பட்டி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் படுகாயம் அடைந்து இறந்தார். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.