ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கட்டிட மேஸ்திரி. இவருடைய 1½ வயது பெண் குழந்தை கன்னி ஸ்ரீ வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தது. அப்போது குழந்தை எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதில் குழந்தை, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.