சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

Update: 2023-04-07 19:00 GMT

கிருஷ்ணகிரி பழையபேட்டை பெங்காளி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி மாதம்மாள் (வயது 55). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த மாதம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்