லாரி மோதி கொத்தனார் சாவு

லாரி மோதி கொத்தனார் இறந்தார்.

Update: 2023-02-21 18:45 GMT

திருப்புவனம், 

பூவந்தி போலீஸ் சரகம் டி.அதிகரை அருகே மகாலெட்சுமி நகரை சேர்ந்தவர் குருநாதன் (வயது 60). கொத்தனார். இவர் தனது மனைவி மகாதேவியுடன் மோட்டார் சைக்கிளில் களத்தூர் சென்று சாமி கும்பிட்டார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது பூவந்தி சோதனைச்சாவடி கீழ்புறம் வளைவில் வந்த போது எதிரே வந்த லாரி, ேமாட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குருநாதன் பலியானார். படுகாயம் அடைந்த மகாதேவி மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் ஆகியோர் லாரி டிரைவர் கோட்டைச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்