ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
ஓசூரில் ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
ஓசூர்
ஓசூர் ஒன்னல்வாடி ஜொனபண்டாவை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (வயது 35). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அவர், ஒன்னல்வாடி அருகே உள்ள நஞ்சப்பா ஏரியில், மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அவர் ஏரியில் தவறி விழுந்தார். இதில் அவர் ஏரியில் மூழ்கி பலியானார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.