மின்சாரம் தாக்கி பெண் சாவு

மத்திகிரி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-28 18:45 GMT

மத்திகிரி

மத்திகிரி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் பரவியது

ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா. இவரது மனைவி கவுரம்மா (வயது40). இவர் அந்த பகுதியில் உள்ள காலி நிலத்தில் நேற்று முன்தினம் மாட்டை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அந்த பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக ஒரு அறை கட்டி கொடுக்கப்பட்டு இருந்தது.

அந்த அறையின் சுவற்றில் மின் மீட்டர் பொருத்தப்பட்டு இருந்தது. மாலை பெய்த மழை காரணமாக மின் மீட்டரில் மின்கசிவு ஏற்பட்டு எர்த் கம்பியில் மின்சாரம் பரவியது. அப்போது எர்த் கம்பி மீது மாடு உரசியது. இதனால் மாடு சுருண்டு விழுந்தது. இதையடுத்து கவுரம்மா அந்த கம்பியை எடுக்க முயன்றார்.

பெண் சாவு

அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த கவுரம்மாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கவுரம்மா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கவுரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்