பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

போச்சம்பள்ளி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2022-12-27 18:45 GMT

மத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் அகரம் அருகே உள்ள கதிரம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜிம்மாண்டியூரில் கூலி வேலைக்காக வந்திருந்தார். சம்பவத்தன்று அவர் திருவயலூர் பகுதியில் பாலம் ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்