விபத்தில் விவசாயி சாவு

ராயக்கோட்டை அருகே விபத்தில் விவசாயி இறந்தார்.

Update: 2022-12-12 18:45 GMT

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே உள்ள கல்லுகான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 43). விவசாயி சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் கொப்பக்கரை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்