பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு

தேன்கனிக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீரென இறந்தார்.

Update: 2022-11-27 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

ஊத்தங்கரை தாலுகா லக்கம்பட்டி காலனியை சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நண்பர்களுடன் நேற்று முன்தினம் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் நண்பர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்