பெண் உள்பட 2 பேர் சாவு

குருபரப்பள்ளி, சூளகிரியில் வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update:2022-11-17 00:15 IST
பெண் உள்பட 2 பேர் சாவு

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி, சூளகிரியில் வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மோட்டார்சைக்கிள்கள் மோதல்

கிருஷ்ணகிரி அருகே பில்லனகுப்பம், வசந்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 30). இவர் தனது உறவினரான சின்னம்மாள் (53) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி சிக்காரிமேடு கூட்ரோடு அருகே சென்ற போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முனிராஜ் சென்ற மோட்டார்சைக்கிளின் மீது மோதியது.

இந்த விபத்தில் சின்னம்மாள், முனிராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் லேசான காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சின்னம்மாள், முனிராஜ் ஆகிய 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சின்னம்மாள் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். முனிராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மொபட் மீது லாரி மோதல்

மதுரை மாவட்டம் கொச்சடையை சேர்ந்த செல்வம். இவருடைய மகன் அருண்குமார் (22). சம்பவத்தன்று அவர், மொபட்டில் சூளகிரி அருகே பவர் கிரீட் எதிரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருண்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்