கிணற்றில் விழுந்து தொழிலாளி சாவு
கல்லாவி அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளி இறந்தார்.
ஊத்தங்கரை:
கல்லாவி அருகே உள்ள ஏ.ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று அவர் சுணாம்பதி கிராமத்தில் சென்றபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.