விஷ கிழங்கை சாப்பிட்ட தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரி அருகே விஷ கிழங்கை சாப்பிட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-02 18:45 GMT

கிருஷ்ணகிரி அருகே உள்ள வெலகலஅள்ளியை சேர்ந்தவர் கோபால் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 29-ந் தேதி வெலகலஅள்ளி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு இருந்த விஷ கிழங்கை அவர் எடுத்து சாப்பிட்டு உள்ளார். இதனால் மயங்கி விழுந்த கோபாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் பரிதாபமாக இறநதார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்