மயங்கி கிடந்த கண்டக்டர் சாவு

மயங்கி கிடந்த கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-09-05 17:33 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள வன்னிவயல் பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் முருகவேலு (வயது47). அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவி இறந்துவிட்டாராம். இதனால் இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரம் மஞ்சனமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெயலட்சுமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து தங்கை சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அரண்மனை பகுதியில் மயங்கிய நிலையில் கிடப்பதாக தங்கை சாந்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்டக்டர் முருகவேலு இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்