வேன் மீது ஜீப் மோதிய விபத்தில் டிரைவர் சாவு

ஓசூர் அருகே வேன் மீது ஜீப் மோதிய விபத்தில் டிரைவர் இறந்தார். தந்தை சாவில் சந்தேகம் உள்ளதாக மகன் போலீசில் புகார்

Update: 2022-07-27 16:18 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே வேன் மீது ஜீப் மோதிய விபத்தில் டிரைவர் இறந்தார். தந்தை சாவில் சந்தேகம் உள்ளதாக மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வேன் மீது ஜீப் மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 52). பிக்கப் வேன் டிரைவர். இவர் கடந்த 21-ந் தேதி ஓசூர் அருகே கதிரேப்பள்ளியில் சென்றபோது அந்த வழியாக வந்த ஜீப், வேன் மீது மோதியது. இந்த விபத்தில், ராஜப்பா படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 25-ந்தேதி ராஜப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

சாவில் சந்தேகம்

இந்தநிலையில் ராஜப்பாவின் மகன் ஸ்ரீகாந்த் (24) என்பவர் தனது தந்தையை அன்கேபள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (45) தனது கூட்டாளிகளின் உதவியுடன் தந்தையை தாக்கி விபத்தை ஏற்படுத்தியதாகவும், தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜப்பா விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்