வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.
பர்கூர்:
பர்கூர் அடுத்த மஜீத் கொல்லையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் மொபட்டில் சின்னபனமுட்லு அருகே சென்றார். அப்போது நிலைதடுமாறி அவர் மொபட்டுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கந்திக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பிச்சாண்டி (52). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பர்கூரில் கூட்ரோடு அருகே சைக்கிளில் சென்றார். அப்போது எதிரில் வந்த ஜீப், சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பிச்சாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.