ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே செம்மமடம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 40). இவர் சத்யா நகர் பகுதியில் குடும் பத்துடன் குடியிருந்து வருகிறார். தனியார் தங்கும் விடுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக தினகரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தங்கச்சிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினகரன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.