மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.

Update: 2022-06-17 14:55 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே சடையனேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகவேல் (வயது 56). வயல் வெளியில் ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் முதுகுளத்தூர் பகுதிகளில் லேசான இடியுடன் மழை பெய்தது. இதில் திடீரென எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் விவசாயி சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து இளஞ்செம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்