மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தொழிலாளி பலியானார்.;

Update: 2023-10-26 19:30 GMT

காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி தாலுகா அனகோடி அருகே உள்ள வேடர்தட்டக்கல்லை பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 32). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் சந்தூர்- காவேரிப்பட்டணம் சாலையில் கண்ணன்குட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்