பாப்பிரெட்டிப்பட்டி அருகேதேங்காய் உரிக்கும் எந்திரத்தில் சிக்கி சிறுவன் சாவு

Update: 2023-08-27 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நேற்று தேங்காய் உரிக்கும் எந்திரத்தில் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 9 வயது சிறுவன் தேங்காய் உரிக்கும் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தான். இதனையடுத்து பெற்றோர் அவனை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் வழியிலேயே உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் வராததால் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்