கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே நடத்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தனியார் நிறுவன ஊழியர்
கடலூர் மாவட்டம் கீழ் மனகுடியை சேர்ந்தவர் பிரபு (வயது 28). இவர் கிருஷ்ணகிரியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 25-ந் தேதி இரவு மகராஜகடை- கிருஷ்ணகிரி சாலையில் மேல்பட்டி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் பிரபு மீது மோதினார்.
விசாரணை
இதில் பலத்த காயம் அடைந்த பிரபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு இறந்தார். இதுகுறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.