தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கே.வேட்ரப்பட்டியை் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் சேலம் 5 ரோடு அருகே வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் பெற்றோரை பார்க்க ஊருக்கு வந்்தார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வெங்கட்ராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.