இறந்த நிலையில் கரை ஒதுக்கிய கடல் பசு

தூத்துக்குடியில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியது.

Update: 2023-02-16 18:45 GMT

தூத்துக்குடியில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது.

இறந்த நிலையில் கடல் பசு

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இறந்த நிலையில் அரிய வகை கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியது. இதை கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் பார்த்து மன்னார்வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தூத்துக்குடி வனச்சரக அலுவலர் ஜினோ பிளசில் தலைமையில் வனவர் மதனகுமார், வனகாப்பாளர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் நேற்று காலை முத்துநகர் கடற்கரைக்கு வந்தனர். அவர்கள், இறந்து கிடந்த கடல் பசுவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடற்கரையில் புதைப்பு

அப்போது, அந்த கடல் பசு அழுகிய நிலையில் காணப்பட்டது. சுமார் 7 அடி நீளமும், 80 கிலோ எடையும் கொண்ட இந்த கடல் பசுவுக்கு 5 வயது வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடல் பசுவின் உடலை அந்த இடத்திலேயே கால்நடை டாக்டர் வினோத் பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அதன் உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது.

கப்பல் அல்லது படகில் மோதி கடல் பசு உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்