திருச்செங்கோட்டில் சரக்கு ஆட்டோ மோதி3-ம் வகுப்பு மாணவன் பலி

Update: 2023-04-24 18:45 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோட்டில் சரக்கு ஆட்டோ மோதி 3-ம் வகுப்பு மாணவன் பலியானான்.

3-ம் வகுப்பு மாணவன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சீராப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு சுபிக்ஸ் (வயது 9) என்ற மகனும், சகானா என்ற மகளும் இருந்தனர். விசைத்தறி தொழிலாளியான பிரகாஷ், திருச்செங்கோடு கைலாசாம்பாளையத்தில் சின்னமுத்து என்பவரது தறிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதற்காக அவர் அங்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சிறுவன் சுபிக்ஸ் அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

ஆட்டோ மோதி பலி

இந்தநிலையில் நேற்று சுபிக்ஸ் தறிக்கூடத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு சரக்கு ஆட்டோ வந்தது. அதில் இருந்து சரக்குகள் இறக்கப்பட்ட நிலையில், டிரைவர் ஆட்டோவை பின் நோக்கி இயக்கினார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சுபிக்ஸ் மீது ஆட்டோ மோதியது.

இதில் அவன் பலத்த காயம் அடைந்தான். அவனை பெற்றோர் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதித்தபோது, ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனால் பெற்றோர் சுபிக்ஸ் உடலை பார்த்து கதறி அழுதனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோ டிரைவரான அப்பூர்பாளையம் விஜயராஜ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு ஆட்டோ மோதி 3-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்