இறந்தவரின் அஸ்தியை மாற்றிக்கொடுத்ததால் தகராறு- கோபி மின் மயானத்தில் பரபரப்பு

கோபி மின்மயானத்தில் இறந்தவரின் அஸ்தியை மாற்றிக்கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது.

Update: 2023-04-04 21:56 GMT

கடத்தூர்

கோபி மின்மயானத்தில் இறந்தவரின் அஸ்தியை மாற்றிக்கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது.

தாயாரின் அஸ்தி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்தவர் வைஜெயந்திமாலா (வயது 73). இவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். உறவினர்கள் அவருடைய உடலை கோபியில் உள்ள ஒரு மின்மயானத்தில் தகனம் செய்தனர்.

இதையடுத்து நேற்று வைஜெயந்திமாலாவின் மகன் ஹரிநாத் தாயாரின் அஸ்தியை பெற்றுக்கொள்ள மின்மயானத்துக்கு வந்தார். அப்போது மின்மயான ஊழியர்கள் வைஜெயந்திமாலாவின் அஸ்தியை வேறு ஒருவருக்கு மாற்றி தந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தகராறு

அதை கேட்டதும் ஆத்திரமடைந்த ஹரிநாத், என்னுடைய தாயாரின் அஸ்தியை வேறு ஒருவருக்கு நீங்கள் கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு. நான் எப்படி சடங்குகள் செய்வது. அஸ்தியை புனித நதிகளில் கரைக்கலாம் என்று இருந்தேனே என்று கேட்டார். அதற்கு மின்மயான ஊழியர்கள் வேண்டுமென்று நாங்கள் செய்யவில்லை என்று கூற அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோபி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபிலக்கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் மின்மயானத்துக்கு சென்று ஹாிநாத்தை சமாதானப்படுத்தினார்கள்.

மேலும் மின்மயான ஊழியர்களும் ஹரிநாத்திடம் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து ஹரிநாத் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்