தர்மபுரியில் விளக்கு ஏற்றிய போது தீக்காயமடைந்த பெண் பலி

Update: 2022-12-21 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி குப்பாண்டி தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி (வயது 48). இவர் கார்த்திகை தீபத்தின் போது வீட்டில் அகல் விளக்குகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய சேலையில் தீப்பிடித்தது. இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் உமா மகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்