ஓசூர் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் சாவு

Update: 2022-11-09 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் புதிய பஸ் நிலையத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 4-ந் தேதி மயங்கி கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள், ஓசூர் டவுன் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசமூர்த்திக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் அங்கு சென்று, மயங்கி கிடந்த நபரை மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்