மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிறுவன் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிறுவன் பலியானான்.

Update: 2022-08-16 18:46 GMT

எருமப்பட்டி:

வடவத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் நாகலிங்கம். இவருடைய மகன் தனுஷ் (வயது 17). இவர் நேற்று எருமப்பட்டி அருகே காவல்காரப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே குமாரபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்த நல்லியப்பன் (53), பழனிசாமி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் தனுஷ் பரிதாபமாக இறந்தான். நல்லியப்பன், பழனிசாமி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்