2-வது நாளாக சோதனை ஓட்டம்: மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில் 6-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கம் - கோட்ட மேலாளர் தகவல்

2-நாளாக சோதனை ஓட்டம் நடந்த நிலையில், மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில் அடுத்த மாதம் 6-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட மேலாளர் கூறினார்.

Update: 2023-02-14 20:38 GMT

திருமங்கலம்

2-நாளாக சோதனை ஓட்டம் நடந்த நிலையில், மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில் அடுத்த மாதம் 6-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட மேலாளர் கூறினார்.

2-வது நாளாக சோதனை ஓட்டம்

மதுரை-திருமங்கலம் இடையே 17.32 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை ெரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ெரயில் பாதையில் பெங்களூரு தென் சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார். அப்போது திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்ட அதிவேக ெரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ெரயில் 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் புதிய இரட்டை பாதையில் செய்யப்பட்டுள்ள மின்மயமாக்க ஏற்பாடுகளை தெற்கு ெரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே. சித்தார்த்தா, மதுரை கோட்ட மேலாளர் அனந்த் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது 5 பெட்டிகள் இணைக்கப்பட்ட டீசல் என்ஜின் ெரயில் மூலம் திருமங்கலத்தில் இருந்து ஹார்விபட்டி வரை மின் பாதைகள் சீராக உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து மின்சார ெரயில் என்ஜின் ஹார்விப்பட்டி சென்று அங்கிருந்து 120 கிலோமீட்டர் வேகத்தில் ெரயிலை இயக்கி 2-வது நாளாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அடுத்த மாதம் இயக்கம்

இந்த ஆய்வு பணியால் மதுரை-விருதுநகர் இடையிலான பகல் நேர ெரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மதுரை கோட்ட மேலாளர் அனந்த் கூறும்போது, மதுரையில் இருந்து திருமங்கலம் வரை அமைக்கப்பட்ட புதிய ெரயில் பாதை பணிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

மின் சப்ளை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்னும் ஒரு சில பணிகள் முழுமையாக நிறைவு அடையாததால் வருகிற மார்ச் 6-ந் தேதிக்கு பிறகு புதிய இரட்டை பாதையில் ெரயில் போக்குவரத்து தொடங்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்